Welcome to Suyashiksha   Click to listen highlighted text! Welcome to Suyashiksha Powered By GSpeech

SuyaShiksha

Education is the manifestation of the perfection already in manby Swami Vivekananda

 

கல்வி என்பது மனிதனிடத்தில் உள்ள தெய்வீகத் தன்மையை விழிப்புறச் செய்து, சமூகத்திற்கும் ஏழை எளிய மக்களுக்கும் பயன்படக் கூடிய உன்னதமான வாழ்வினை வாழ மனிதனை பண்படுத்துவது. கல்வி நல்ல பண்பினையும் அறிவையும் நல்கவேண்டும். கல்வியானது நன்நெறிகளையும், தர்மத்தையும், சத்தியத்தையும் தவறாது பின்பற்றி வாழ வழிகாட்ட வேண்டும்.

இன்றைய கல்வி வெறும் ஏட்டுக்கல்வியாக உள்ளது. “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்னும் பழமொழிக்கு ஏற்ப இன்றைய கல்விமுறை நல்ல மனிதர்களை உருவாக்க இயலாது. இன்றைய கல்விமுறை மனிதனை தர்மத்தின் வழியில் வாழ வழிகாட்ட இயலுமா என்றால் அது மிகவும் ஐயப்பாட்டிற்கு உரியதுவே. இன்றைய கல்வி முறை வியாபார முறையை அடிப்படையாக கொண்டுள்ளது. இது மிகவும் வேதனைக்குரியது.

எல்லாம் வல்ல இறைவனின் அருளாலும், இறைவனின் திருவடி அடைந்த எங்கள் தாத்தா திரு. உ.இரெத்தின சபாபதி அவர்களின் ஆசியாலும், சுயஷிக்ஷா என்னும் இந்த வலைத்தளத்தில் நல்நூல்களை பல மொழிகளிலும் மொழி பெயர்த்து அனைவரும் கற்பதற்காக உருவாக்குகிறோம். இதில் ஏதேனும் பிழை இருப்பின், சிறியேனுடைய பிழையைப் பொறுத்து,  நல்லவை கொண்டு அல்லவை களைக என்னும் முதுமொழிக்கு ஏற்ப, அனைவரும் நல்ல கருத்துக்களை ஏற்று பயன்பெறும்படி வேண்டிக்கொள்கிறேன்.

இவண்,

செ.சுயம்புநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to listen highlighted text! Powered By GSpeech